Friday, August 15, 2008

சுதந்திரம்

இன்று இந்தியத் திருநாட்டின் சுதந்திர நாள். 61 ஆண்டுகளுக்கு முன்னால் "இவர்கள் வலியவர்கள். நம் ஆதிக்கம் இனி செல்லாது" என்று உணர்ந்து இங்கிலாந்து அரசு வெளியேறிய நாள். உயர்ந்த எண்ணங்களும் , கொள்கைகளும் இந்தியனின் உள்ளத்தில் குடி இருந்திருக்க வேண்டிய தருணம் என்று கற்பனை செய்து நெகிழ்கிறேன்.

எனக்கு அடிமை உணர்வுக் கிடையாது. நான் பிறந்த போது என்னைச் சுற்றி மகிழ்ச்சி தான் இருந்தது. சர்வாதிகாரமோ, அந்நியர் ஆதிக்கமோ இல்லை. ஆனால் என் பிறப்புச் சான்றிதழ் வாங்க என் தந்தை 100 ரூபாய் செலவு செய்ய வேண்டி இருந்தது. இது அரசாங்கத்திற்கு செலுத்திய கட்டணம் அல்ல. ஒரு தனி நபருக்கு "அளித்தப்" பணம்.

இந்த நிலை வேதனைக்குரியது. இன்றும் மாறவில்லை என்று தான் எண்ணுகிறேன் .

கடமை செய்வதற்கும் , கடமை செய்யாமல் இருப்பதற்கும் , தொழில் தர்மம் இல்லாமல் செயல்படுவதற்கும் இலஞ்சம் கொடுப்பதையும், இலஞ்சம் வாங்குவதையும் செய்யாமல் இருக்க விழைகிறேன். என் வழியில் இலஞ்சம் வாங்கும் எண்ணம் உடையவர்கள் வராமல் இருக்க இந்தியத் தாயைப் பிரார்த்திக்கிறேன்.

ஜெய் ஹிந்த் !!

No comments: