Monday, January 30, 2017

பயணக் கதைகள்

இந்தப் பயணத்தின் தொடக்கத்தை நிர்ணயிப்பதே ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் தான். அம்மாவின் வயிற்றில் கரு உதித்த உடன் பயணம் தொடங்குமா அல்லது ஒரு உடல் கொண்டு மண்ணில் உதித்தப் பின் இதன் தொடக்கமா? என்னை பொறுத்தவரையில் இந்த மண்ணில் தனகென்று ஒரு உடலக் கொண்டு உதித்த அந்த நொடியில் நம் கதையின் துவக்கம்.

 இது ஒரு வேடிக்கையான கதை. ஏனெனில் நம் கதை தொடங்கிய அந்த நொடி நமது கதையின் முதல் பாகம் முற்று பெறுகிறது . நம்மை அறியாமல்  நம் சுயநினைவு இல்லாமல் எழுதி முடிக்கப்பட்ட அந்த முதல் பாகத்தை சில ஞானியர் முன்வினைப் பயன் என்று கூறுகின்றனர். ஆகா, நமது கதையின் முன் பாகத்தில் நமக்கு எவ்விதமான கட்டுபாடும் இல்லை. சொல்லப்போனால் நமது இரண்டாம் பாகத்தின் தொடக்கமும் அவ்வாறனதே. பிறந்து சில நிமிடங்களில் தாயின் காதில் தேன் வந்து பாய நாம் எழுப்பும் முதல் அழுகை முதல் நாம் ஒரு மழலையாக பெற்றோர் , உற்றோர், மற்றோர் மனதில் திகழும் வரையில் நம் கதை மேல் நமக்குக் கட்டுப்பாடு இல்லை.

கதாநாயகனாக, கதாநாயாகியாக விளங்கும் நமக்கு இந்த கதை மேல் அதிகாரம் இருக்கிறதா? எனது கதைத் தொடங்கி ௨௯ ஆண்டுகள் முடிவதைந்து விட்டன. இனி எதனை ஆண்டுகளில் கதை முற்றுப் பெரும் என்பதை அறியேன். கதாநாயகியான நான் கதையின் ஆசிரியையாக மாற முடியுமா? அல்லது கதாசிரியரின் மனதை என் போக்கிற்கு திசை திருப்ப முடியுமா? அல்லது கதையின் எல்லா பகுதிகளிலும் சிறப்பாக தான் நடிக்க முடியுமா?

இந்தக் கேள்விகளை நெஞ்சில் சுமந்துக் கொண்டு என் கதையில் இடம் பெற்றுள்ள மற்ற பாத்திரங்களை நோக்கி கவனத்தைத் திருப்புகிறேன்.

Wednesday, December 15, 2010

கண்ணதாசனின் வைர வரிகள்

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இதில் ஊர் என்ன ? சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே !
வாழ்வின் பொருள் என்ன, நீ வந்த கதை என்ன?

நான் கேட்டு தாய் தந்தைப் படைத்தாரா? இல்லை ஏன் பிள்ளை என்னைக் கேட்டுப் பிறந்தனா ?
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி ; கொன்றால் பாவம் தின்றால் போச்சு இது தான் என் கட்சி.

வெறும் கோயில் இதில் என்ன அபிஷேகம்? உன் மனம் எங்கும் தெருக் கூத்து பகல் வேஷம். கள்ளிகென்ன முள்ளில் வேலிப் போடி தங்கச்சி! காடுகென்ன தோட்டக்காரன் இது தான் என் கட்சி! கொண்டதென்ன கொடுத்ததென்ன இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே!

Tuesday, March 30, 2010

உற்சாகம்

"கருத்தில் தெளிவிருக்க , சிந்தையில் திடமிருக்க,
இறைவன் துணையிருக்க , சலிப்பெனத் தோழி ?
வாழ்வில் இனிமை நிலைக்க , இறவாத சரித்திரம் படைப்பாய் நீ!"

- ஒரு நண்பரின் பிரியா விடை வார்த்தைகள்

Friday, September 19, 2008

சூரிய வணக்கம்

ஆயிரம் கரங்கள் நீட்டி, அணைக்கின்ற தாயே போற்றி !
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி, இருள் நீக்கும் தந்தாய் போற்றி !
தாயினும் பரிந்து, சால சகலரை, அணைப்பாய் போற்றி !
தூரத்தே நெருப்பை வைத்து , சாரத்தைத் தருவாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம், துணைக் கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
ஞாயிறே நலமே வாழ, நாயகன் வடிவே போற்றி ,
நானிலம் உள நாள் மட்டும் போற்றி போற்றி போற்றி !!!

Tuesday, September 9, 2008

நிலா நிலா ஓடி வா. நில்லாமல் ஓடி வா - பழையக் கதை
நொடிப் பொழுதே ஓடி வா. வீணாக செல்லாமல் ஓடி வா - என் கதை

மனம் விரும்பாத செயல்களில் நேரம் செலவு செய்யாமல் இருக்க விழைகிறேன்.

Friday, August 15, 2008

சுதந்திரம்

இன்று இந்தியத் திருநாட்டின் சுதந்திர நாள். 61 ஆண்டுகளுக்கு முன்னால் "இவர்கள் வலியவர்கள். நம் ஆதிக்கம் இனி செல்லாது" என்று உணர்ந்து இங்கிலாந்து அரசு வெளியேறிய நாள். உயர்ந்த எண்ணங்களும் , கொள்கைகளும் இந்தியனின் உள்ளத்தில் குடி இருந்திருக்க வேண்டிய தருணம் என்று கற்பனை செய்து நெகிழ்கிறேன்.

எனக்கு அடிமை உணர்வுக் கிடையாது. நான் பிறந்த போது என்னைச் சுற்றி மகிழ்ச்சி தான் இருந்தது. சர்வாதிகாரமோ, அந்நியர் ஆதிக்கமோ இல்லை. ஆனால் என் பிறப்புச் சான்றிதழ் வாங்க என் தந்தை 100 ரூபாய் செலவு செய்ய வேண்டி இருந்தது. இது அரசாங்கத்திற்கு செலுத்திய கட்டணம் அல்ல. ஒரு தனி நபருக்கு "அளித்தப்" பணம்.

இந்த நிலை வேதனைக்குரியது. இன்றும் மாறவில்லை என்று தான் எண்ணுகிறேன் .

கடமை செய்வதற்கும் , கடமை செய்யாமல் இருப்பதற்கும் , தொழில் தர்மம் இல்லாமல் செயல்படுவதற்கும் இலஞ்சம் கொடுப்பதையும், இலஞ்சம் வாங்குவதையும் செய்யாமல் இருக்க விழைகிறேன். என் வழியில் இலஞ்சம் வாங்கும் எண்ணம் உடையவர்கள் வராமல் இருக்க இந்தியத் தாயைப் பிரார்த்திக்கிறேன்.

ஜெய் ஹிந்த் !!

Tuesday, June 19, 2007

வனளந்து வளைப்பீர்

மூலம்: கார்த்திகேயன், இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ், சென்னை

----------------------------------------------------------------------------------------------

வளைந்து வளைப்பீர்

கேசம் வளையாமல் கோடாய் வகிடேது?

அனித்த மலரன்ன வாழ்க்கை ஆகாது ஆகாது கேண்மோ!

நார் வளைந்து கொடாமல் போனால் நாற்றத் துழயுந்தான் மாலையுமாமோ?

விடமரம் விட்ட வேரும் மண் பொறுத்து வான் மழைக்கு வழி தருமதை மறுத்தலாமோ?!

படிக்கட்டாய் சீரமைந்த பாடலிது புதியதோர் கவிமரபை புகல்கிறது ; புதியதிந்த மரபினை யானுரைத்த போது புன்னகைத்து வளைந்ததென் தமிழே!